WELCOME TO
- மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பழைய கல்முனை வீதி காத்தான்குடி 2ம் குறிச்சியில் ஹிழுறிய்யா தைக்காப் பள்ளிவாயலுக்கு அருகில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த கட்டிடங்களுடன் காட்சி தருவதே மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம் ஆகும்.
- பழம்பெரும் வரலாற்றை கொண்ட தனிப்பெரும் முஸ்லிம் கிராமமாகிய காத்தான்குடி நகரத்தின் பழைய கல்முனை வீதியில் அமைந்துள்ள இப்பாடசாலை 1947ம் ஆண்டு, மார்ச் 20ம் திகதி இப்பிரதேச நலன் விரும்பிகளின் முயற்சியினால் மர்ஹும் சேர் ராஸிக் பரீட் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- இப்பிரதேச நலன் விரும்பியான மர்ஹும் AMY. யூசுப் ஹாஜியார் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் தற்காலிகமாக ஒருவரை அதிபராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை ஆரம்பத்தில் ஹிழுறிய்யா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டு இன்றும் அதே பெயர் கொண்டு இயங்கி வருகின்றது.
- பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட தனிப்பெரும் முஸ்லிம் கிராமமாகிய காத்தான்குடியில் மார்க்கக்கல்வி கற்பதிலும் மார்க்க கிரியைகளை நிறைவேற்றுவதிலும் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தனர். இதன் பின்னணியிலேதான் பழைய கல்முனை வீதி 2ம் குறிச்சியில் ஹிழுறிய்யாத் தைக்கா என்ற பெயரில் மார்க்க கடமைகளை நிறைவேற்றக் கூடியதொரு வணக்கஸ்தலமாக ஹிழுறிய்யாத் தைக்கா பள்ளிவாயல் இப்பகுதியில் சிறப்புற விளங்கியது. ஊரின் தலைசிறந்த பல உலமாக்கள் இப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததோடு பள்ளிவாயல்களை நிருவகிப்பதிலும் இவ்வுலமாக்கள் பெரும் பங்காற்றினர். இந்த வகையில் ஹிழுறிய்யாத் தைக்கா பள்ளிவாயலையும் பல தசாப்தங்களாக உலமாக்களே நிருவகித்து வந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- மார்க்கக் கல்வியை பெறுவதிலும் மார்க்க கிரியைகளை நிறைவேற்றுவதிலும் சிறப்புற்று விளங்குவதையும் மக்கள் கல்வியில் காட்டும் ஆர்வத்தையும் கண்ட இப்பிரதேசத்தில் வாழ்ந்த அக்கால துடிப்புள்ள இளைஞர்களாக விளங்கிய மர்ஹும்களான SHM. உபைது ஹாஜியார், MM. யாஸின் பாவா ஹாஜியார், PL. லெப்பை சம்சுதீன் ஆலிம் போன்றவர்கள் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி கருதி ஹிழுறிய்யா சோனகர் சங்கம் அல்லது “கிஜாரத்துல் முஸ்லிம்” வாலிபர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி பிரதேச நன்மை கருதி பல செயற் திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருவதோடு “நவயுகம்” என்ற பெயரில் ஒரு பத்திரிகையையும் நடாத்தி வந்தனர். இதன் ஒரு மைல்கல்லாகவே இப்பிரதேச மாணவர்களின் நன்மை கருதி கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் ஹிழுறிய்யா முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப்பிரதேசத்தின் ஒரு பாடசாலையை நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதன் பயனாக இப்பிரதேசத்தின் தலைவராக விளங்கிய மர்ஹும் AMY. யூசுப் ஹாஜியார் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட ஓலைக்கொட்டிலில் இப்பாடசாலையை நிறுவி இதனை ஒரு அரசாங்க பாடசாலையாக பதிவு செய்யும் வரை அப்போது ஆசிரிய பயிற்சியை முடித்துக் கொண்டு வேலை கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருந்த மர்ஹும் MM. அப்துல் காதர் என்பவரை தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டதோடு இப்பாடசாலையின் முதல் மாணவனாக சம்சுதீன் ஆலிம் அவர்களின் மகன் அல்ஹாஜ் MSA. பதுறுதீன்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
- ஒவ்வொரு பிள்ளையும் விசேடமான பிள்ளையே! அவர்களது தனித்துவமான ஆற்றல்களை உச்ச அளவில் விருத்தி செய்வதற்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் மனித வளங்களை விருத்தி செய்து நாட்டிற்கு பங்களிப்புச் செய்யும் பாரிய பொறுப்பினை நிறைவேற்றுவதற்கும் பிள்ளைநேயப் பாடசாலை முன் நின்று உழைக்கும்.
பிள்ளைநேயப் பாடசாலை பரிமாணங்கள்
- உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு உயிரோட்டமான வகையில் உட்படுத்தல்.
- ஆண், பெண் சமூக இயல்பு சம வாய்ப்புக்களில் கவனம் செலுத்தல்.
- கற்றல் பேறுகளை விருத்தி செய்தல்.
- ஆரோக்கியமாகவும் கவனிப்புடனும் பாதுகாப்பு பெறுதல்.
- மாணவர்கள், குடும்பம மற்றும் சமூகத்துடன் செயற்பாட்டு ரீதியில் தொடர்புபடுதல்.
- பிள்ளைநேயத் தொகுதி, கொள்கைகள் அணுகு முறைகள், விதி முறைகளுக்கு ஊடாக உதவி பெறல்.
அடிப்படைத் தேர்ச்சிகள்
- தொடர்பாடல் தொடர்பான தேர்ச்சிகள்.
- ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள்.
- சூழல் தொடர்பான தேர்ச்சிகள்.
- வேலை உலகிற்கு தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள்.
- சமயமும் ஒழுகலாறும் தொடர்பான தேர்ச்சிகள்.
- ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தலும் விளையாட்டு தொடர்பான தேர்ச்சிகள்.
- கற்றலுக்குக் கற்றல் தொடர்பான தேர்ச்சிகள்.
மகுட வாசகம்
MOTTO
“அறிவு – ஞானம்”
“Knowledge - Wisdom”
“அறிவு – ஞானம்”
“Knowledge - Wisdom”
தூர நோக்கு
VISION
“அறிவாற்றலும் ஆளுமையும் மார்க்கப்பற்றுள்ள சமூகம்”
“Society with knowledge, Personality and Religious devotion”
நோக்கக் கூற்று
MISSION
“கல்வி நாடிவரும் குழந்தைகளை சமூகப் பொருத்தப்பாடுடைய நல்லொழுக்கமுள்ள நற்பிரஜையாக ஆக்குவதற்கான திறன்மிக்க கற்றலை மேற்கொள்ளல்”
“Providing Learning opportunities to children seeking education to make them well disciplined and socially adoptable citizens”
எங்கள் கோஷம்
OUR SLOGAN
“புலமைகள் பெற்று புதுமைகள் படைப்போம்”
“Let’s learn and create innovations”
தூர நோக்கு
VISION
“அறிவாற்றலும் ஆளுமையும் மார்க்கப்பற்றுள்ள சமூகம்”
“Society with knowledge, Personality and Religious devotion”
“அறிவாற்றலும் ஆளுமையும் மார்க்கப்பற்றுள்ள சமூகம்”
“Society with knowledge, Personality and Religious devotion”
நோக்கக் கூற்று
MISSION
MISSION
“கல்வி நாடிவரும் குழந்தைகளை சமூகப் பொருத்தப்பாடுடைய நல்லொழுக்கமுள்ள நற்பிரஜையாக ஆக்குவதற்கான திறன்மிக்க கற்றலை மேற்கொள்ளல்”
“Providing Learning opportunities to children seeking education to make them well disciplined and socially adoptable citizens”
எங்கள் கோஷம்
OUR SLOGAN
“புலமைகள் பெற்று புதுமைகள் படைப்போம்”
“Let’s learn and create innovations”
OUR SLOGAN
“புலமைகள் பெற்று புதுமைகள் படைப்போம்”
“Let’s learn and create innovations”