Information

மாணவர்களுக்கான ஒழுக்க முறைகள்

  • மாணவர்கள் பாடசாலை ஆரம்பமாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். பாடசாலை ஆரம்பிக்கும் நேரம்      மு.ப. 7.30மணி
  • வகுப்பாசிரியரினால் தயாரிக்கப்பட்ட வகுப்புச் சுத்தம் செய்யும் அட்டவணையின் பிரகாரம் தினமும் வகுப்பறையைச் சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தல் வேண்டும்.
  • பாடசாலைச் சீருடையில் பாடசாலைக்குவருகைதரல் வேண்டும்.
  • மாணவர்கள் பாடசாலை இலட்சினை பொருந்திய கழுத்துப்பட்டி அல்லது சேட் அல்லது சட்டை அணிந்து வரவேண்டும்.
  • மாணவர்கள் தமது மாணவர் தொடர்பாடல் புத்தகத்தை(Communication Book) தினமும் கொண்டுவருதல் வேண்டும்.
  • பாடசாலைக்கு வராத மாணவர்கள் Communication Book இல் வராதமைக்கான காரணத்தை பதிவு செய்து பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையொப்பத்துடன் அதிபர் அல்லது பிரதிஅதிபரிடம் காண்பித்து வகுப்பில் அனுமதிப்பதற்கான ஒப்பம் பெற்று அதனை வகுப்பாசிரியரிடம் காட்டிய பின்பே வகுப்பில் அனுமதிக்கப்படுவர். இரண்டு நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு வராதவர்கள் பெற்றோருடன் சமுகமளிக்க வேண்டும்.
  • வகுப்பாசிரியர்களால் ஒழுங்குபடுத்தப்படும் உணவு அட்டவணைக்கு ஏற்ப நடக்க வேண்டும்.
  • குப்பைகளை உரிய இடத்தில் இடவேண்டும்.
  • சாப்பாட்டுப் பெட்டியில்(Tiffin Box) உணவு கொண்டு வர வேண்டும்.
  • வகுப்பறை, பாடசாலைச் சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருப்பதற்கான கட்டளைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்.
  • பாடசாலை நேரத்தில் அல்லது பாட வேளையில் வகுப்பை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவ்வாறு செல்வதாயின் அதற்கான அனுமதி அட்டையை(Exit Card) பெற்றுச் செல்ல வேண்டும்.
  • பாடவேளையின் போதுசிற்றுண்டிச்சாலைக்குசெல்லக்கூடாது.
  • வகுப்பறையில் வகுப்புத் தலைவரின் சொற்படிநடக்கவேண்டும்.
  • ஆய்வு கூடம், நூலகம் போன்றவற்றுக்கு செல்லும் போது ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • நூலகம் செல்லும் மாணவர்கள் பாடவேளை ஆரம்பமாகி 5 நிமிட நேரத்திற்குள் சென்று விட வேண்டும். அவ்வாறு சென்றவர்கள் பாடம் முடியும் வரை நூலகத்தில் இருத்தல் வேண்டும். நூலகத்தில் அமைதி பேணப்படல் வேண்டும்.
  • சகல மாணவர்களும் காலை ஒன்று கூடல் நிகழ்வில் தவறாது பங்கு பற்றுதல் வேண்டும்.
  • சகல மாணவர்களும் காலை உடற்பயிற்சி நிகழ்வில் ஈடுபடுதல் வேண்டும்.
  • பாடசாலை ஆரம்ப வேளையிலும் முடியும் வேளையிலும் சமய அனுஷ்டானங்களை ஒழுங்காக அனுசரிக்க வேண்டும்.
  • நகைஅணிந்துவரல், கைகளில் தேவையற்ற ஆபரணங்களை அணிந்து வரல், கைக்கடிகாரங்கள் அணிந்துவரல் தவிர்க்கப்படவேண்டும்.
  • கையடக்கத் தொலைபேசி, புகைப்படக் கருவிமற்றும் இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வருதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • தவணைப்பரீட்சையின் போதும் பொதுப்பரீட்சையின் போதும் பரீட்சை விதிமுறைகளை பின்பற்றிநடத்தல் வேண்டும்.
  • பாடசாலையில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் விசுவாசத்துடன் பங்குபற்றல் வேண்டும்.
  • தவணை முடிவில் நடைபெறும் பெற்றோர் சந்திப்பில் பெற்றோர்களைத் தவறாதுபங்குபற்றச் செய்தல் வேண்டும்.
  • பாடசாலைச் சட்டதிட்டங்களை அறிந்து அதன்படி ஒழுகுதல் வேண்டும்.
  • பாடசாலைச் சொத்துக்களுக்கு எவ்விதசேதமும் ஏற்படாதவாறுஅவற்றைப் பேணிப் பாதுகாத்தல் வேண்டும்.
  • பாடசாலைக்குவருகைதரும் சமூகத்தினருடன் மனிதநேயத்துடன் நடத்தல் வேண்டும்.
  • பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை மதித்து நடப்பதுடன் சகமாணவர்களையும் மதித்து அவர்களுடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்
  • பாடசாலையின் தூரநோக்குமற்றும் பணிக்கூற்றை ஒவ்வொரு மாணவரும் தெரிந்து வைபத்திருப்பதுடன் அதற்கேற்ப செயற்பட வேண்டும்.
  • ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு இணைப்பாட விதான செயற்பாட்டிலாவது கட்டாயமாக பங்குபற்றுதல் வேண்டும்.
  • பாடசாலையின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படாதவாறு நடத்தல் அனைவரதும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்து பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்துகொள்ளவேண்டும்.

பெற்றோர்களுக்கான ஒழுக்க விதிகள்

  • தமது பிள்ளைகளைத் தினமும் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
  • தமது பிள்ளைகளின் நலன் கருதி கலந்துரையாட பாடசாலைக்கு வருமாறு அழைக்கப்படும் போது தவறாது பாடசாலைக்குச் சமூகம் தரவேண்டும்.
  • ஒவ்வொரு தவணை இறுதியின் போதும் பிள்ளைகளின் பரீட்சை விடைத்தாள்களை பார்வையிட்டு பிள்ளைகளின் நிலைப்பாடு குறித்து வகுப்பாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் பெற்றோர் சந்திப்பு நிகழ்வில் தவறாது உரிய நேரத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பாடசாலை அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
  • பெற்றோர் பாடசாலைக்கு வரும் போது எமது கலாசாரத்தை பேணும் வகையில் ஆடை அணிந்து வரவேண்டும்.
  • தமது பிள்ளைகளின் நலன் கருதி வகுப்பாசிரியருடன் அல்லது பாட ஆசிரியருடன் கலந்துரையாட வேண்டி ஏற்படின் பாடசாலையில் வியாழக்கிழமைகளில் நண்பகல் 12 மணியின் பின்னர் வந்து சந்திக்கலாம்
  • தமது பிள்ளையுடன் அல்லது வகுப்பாசிரியருடன் அல்லது பாட ஆசிரியர் ஒருவருடன் கலந்துரையாட வேண்டிய தேவை ஒரு பெற்றோருக்கு ஏற்படின் அதிபர் அலுவலகத்தில் அது தொடர்பாக தெரியப்படுத்தினால் சந்திப்பதற்கான ஏற்பாடு செய்துதரப்படும். ஒருபெற்றோர் நேரடியாகவகுப்பறைக்குச் செல்லமுடியாது.
  • தமது பிள்ளைகளின் நடத்தை மற்றும் ஒழுக்க நடைமுறைகளை பெற்றோர் கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும்.
  • தாய்மார்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கும் போது சாரி மற்றும் அபாயா அணிந்து வரவேண்டும்.
  • பாடசாலைக்கு வெளியே தமது பிள்ளைகளின் சகபாடிகள் தொடர்பாகவும் அவர்களின் நடத்தைகோலங்கள் பற்றியும் பெற்றோர்கள் கண்காணிப்பாக இருப்பதுடன் தமது பிள்ளைகளுக்கும் அறிவுரைகளை வழங்குதல் வேண்டும்
  • பாடசாலை அபிவிருத்திக்குழுவில் உறுப்புரிமை பெற்று பாடசாலையின் அபிவிருத்திக்கு உதவவேண்டும்.
  • பாடசாலையின் இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு பிள்ளைகளை உரிய நேரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிள்ளைகளை உரிய இடத்திற்கு உரிய நேரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடசாலை அபிவிருத்திப் பணிகளில் பங்கேற்க வேண்டும்.
  • பாடசாலை நிகழ்வுகளுக்கு பங்களிப்புச் செய்யவேண்டும்
  • பாடசாலையின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படாது நடந்து கொள்ள வேண்டும்

வாப்பாவிடம் சில உறுதிமொழிகள்

  • அன்புள்ள வாப்பா நான் நன்றாகப் படித்து நல்லபெயர் எடுக்கவேண்டும் என்பதற்கான இன்று உங்களுக்கு சில உறுதிமொழிகளைத் தருகின்றேன்…..
  • காலையில் விழித்து, இரவு தூங்கும்வரை உங்களைப்போல் நேரத்தை சரியாகக் கடைப்பிடிப்பேன்.
  • நீங்கள் என்னிடம் கண்டிப்பாக நடந்து கொண்டாலும் அது எனது நன்மைக்கே என்று புரிந்து கொள்வேன்.
  • டீ.வி, செல்போன், கணினி ஆகியவற்றை தேவைக்கேற்றவாறு அறிவு விருத்திக்காக மட்டும் பயன்படுத்துவேன்.
  • எந்தக் கஷ்டம் வந்தாலும் உங்களைப் போல பதற்றமின்றி தைரியமாக் சமாளிப்பேன்.
  • பார்க்கும் பொருட்களை எல்லாம் கண்மூடித்தனமாகக் கேட்டு அடம்பிடிக்கமாட்டேன்.
  • நாநா, தம்பி, ராத்தா, தங்கையிடம் சண்டையிட்டு உங்களுக்குத் தொந்தரவு தரமாட்டேன்.
  • அவசரமாக நீங்கள் ஏதாவது வேலை சொன்னால் முகம் சுளிக்காமல் செய்வேன்.
  • உங்களுக்கும் எமது குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வேன்.
  • நேரத்தையும், பொருட்களையும் வீணாக்காமல் இருப்பேன்
  • நம் குடும்பம் முன்னேற உங்களுடன் சேர்ந்து நானும் பாடுபடுவேன்.
  • நீங்கள் என் பாடசாலைக்கு வருவது என்னைப்பற்றி புகார் பெற அல்ல. மாறாக பரிசு பெறுவதற்காக வரும்படி நடந்து கொள்வேன்.
  • பாடசாலைக்கு நீங்கள் வரும்போது என் ஆசிரியரை மகிழ்வுடன் பார்க்கும்படி நடந்து கொள்வேன்.
  • நமது உறவினரிடையே “இவர் என் பிள்ளை” என நீங்கள் பெருமைப்படும் படி நடந்து கொள்வேன்.
  • மார்க்க கடமைகளைத் தவறாமல் கடைப்பிடித்து உங்களுக்காக பிரார்த்திப்பேன். 
  • வாப்பா உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும் போது நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்வதுபோல் நானும் வேண்டிக் கொள்வேன்.
  • வாப்பா இந்த உறுதிமொழிகளை நான் பேணி நடந்திட நீங்கள் இறைவனிடம் எனக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

உம்மாவிடம் சில உறுதிமொழிகள்

  • உம்மா உங்களுக்கு நான் கைமாறு செய்யும் வகையில் கீழ்க்கண்டவாறு உறுதி மொழிகளை ஏற்கின்றேன்.....
  • உம்மா நான் என்றும் உங்களிடம் உண்மையே பேசுவேன்.
  • என்னால் உங்களுக்கு எந்தக் கவலையும் வராதபடி நடந்து கொள்வேன்.
  • உங்களுக்கு என்றும் நான் பெருமை தேடித்தருவேன்.
  • தினமும் பாடசாலையில் நடப்பவற்றை ஒன்றும் விடாமல் உங்களிடம் கூறுவேன்.
  • உடன் பயில்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
  • தம்பி, தங்கையுடன் அன்பாக பழகுவேன். அவர்களிடம் பொறாமை கொள்ளமாட்டேன்.
  • நீங்களாக எனக்கு வாங்கித்தருவதை மகிழ்ச்சியாக ஏற்பேன்.
  • டீ.வி பார்ப்பது, செல்போனில் விளையாடுவது போன்றவற்றைக் குறைத்துக் கொண்டு நல்லவழியில் நேரத்தை செலவழிப்பேன்.
  • உங்களுக்கு வேண்டிய உதவிகளை நானாகச் செய்வேன்.
  • வீட்டைச் சுத்தமாகவைத்துக் கொள்வதில் உங்களோடு நானும் கவனம் செலுத்துவேன்.
  • படிப்பதையும், வீட்டுப் பாடங்கள் எழுதுவதையும் நீங்கள் கூறாமலே செய்துமுடிப்பேன்.
  • வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குத் தேவையானதைச் செய்வதில் நானும் உதவி புரிவேன்.
  • உம்மா உங்களுக்கு உடல் நலம் சரியில்லாத சமயத்தில் எந்தத் தொந்தரவும் தரமாட்டேன்.
  • நீங்கள் தொழுகையில் ஈடுபடும்போது உங்களுடன் சேர்ந்து நானும் தொழுகையில் ஈடுபடுவேன்.
  • உறவினர்களை மதித்து மரியாதையுடன் நடந்துகொள்வேன்.
  • உங்களுக்காக நான் தினமும் பிரார்த்திப்பேன். 
  • எமது உறவுகளைப் பேணிநடப்பேன்.
  • உம்மா இந்த உறுதிமொழிகளை நான் பேணி நடந்திட நீங்கள் இறைவனிடம் எனக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.